Wednesday, March 1, 2017
NEET A DETAILED EXPLANATION --- நீட் தேர்வு விளக்கம்
https://www.youtube.com/watch?v=pckQ5eJivqw
https://www.youtube.com/watch?v=lxHzN6L4trs
Wednesday, February 15, 2017
Monday, February 13, 2017
நீட் என்பது இருக்கும் கல்வி கொடுமைகளின் ஒரு நீட்சியே. ( எஸ்.எஸ்.பாலாஜி ... சட்டப் பொறியாளர்)
“NEET” மருத்துவ இளநிலை மாணவர் சேர்க்கையில் (MBBS மற்றும் BDS) இன்றைக்கு பெரிதும் அடிபடுகிற பெயர். இந்த நீட் என்பது NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST ஆகும், அதாவது தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வாகும்.
இதுவரை நீட் என்பது தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசுக்கு தமிழக அரசு மருத்துவ கல்லூரிகள் வழங்கும் 15% இடங்களுக்கு மட்டுமே நடைபெற்றது. இந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் நாட்டில் உள்ள அணைத்து கல்லுரிகளிலுமே மாணவர் சேர்க்கை நீட் இன் அடிப்படையில் நடைபெற வேண்டும் என உத்தரவிட்டது, தமிழகத்திலும் இன்னும் சில மாநிலங்களில் இதற்கு எதிர்ப்பு இருந்ததால் நீட் தொடர்பாக ஒரு அவசர சட்டம் கொண்டுவரப் பட்டதில், இந்த ஆண்டு மட்டும் நீட் இல்லாமலே மாநில அரசின் கவுன்செல்லிங் மூலம் நடைபெறும் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தலாம் என இயற்றப்பட்டது,
ஆக அடுத்த ஆண்டு முதல் நீட் உண்டு, இந்த ஆண்டு அரசு கவுன்செல்லிங் மட்டும் அதாவது
1) அரசு கல்லூரிகளில் 85%
2) அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் சிறுபான்மை கல்லூரிகளில் (PRIVATE MINORITY TRUST COLLEGES) 50% மும்,
3) அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் கல்லூரிகளில் (OTHER PRIVATE COLLEGES) மைனாரிட்டி கல்லூரிகளில் 65% ம்
மாணவர் சேர்க்கைக்கு நீட் கிடையாது.
ஆனால் இந்த ஆண்டு கூட
1. அரசு கல்லூரிகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட 15%
2. அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் சிறுபான்மை கல்லூரிகளில் (PRIVATE MINORITY TRUST COLLEGES) 50% மும்,
3. அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் கல்லூரிகளில் (OTHER PRIVATE COLLEGES) 35% ம்
4. மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் அணைத்து கல்லூரிகளில் அணைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட் உண்டு என்பது தான் நிலை.
1) அரசு கல்லூரிகளில் 85%
2) அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் சிறுபான்மை கல்லூரிகளில் (PRIVATE MINORITY TRUST COLLEGES) 50% மும்,
3) அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் கல்லூரிகளில் (OTHER PRIVATE COLLEGES) மைனாரிட்டி கல்லூரிகளில் 65% ம்
மாணவர் சேர்க்கைக்கு நீட் கிடையாது.
ஆனால் இந்த ஆண்டு கூட
1. அரசு கல்லூரிகளில் மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட 15%
2. அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் சிறுபான்மை கல்லூரிகளில் (PRIVATE MINORITY TRUST COLLEGES) 50% மும்,
3. அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் பிற தனியார் கல்லூரிகளில் (OTHER PRIVATE COLLEGES) 35% ம்
4. மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் அணைத்து கல்லூரிகளில் அணைத்து இடங்களுக்கும் மாணவர் சேர்க்கைக்கு நீட் உண்டு என்பது தான் நிலை.
நீட் மூலம் நடைபெறும் மாணவர் சேர்க்கை முழுக்க முழுக்க நீட் மதிப்பெண் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும்.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய இரு மொழிகளில் நடத்தப்பட்டது. இத்தேர்விற்கான பாடத்திட்டத்தை MCI இந்திய மருத்துவ கவுன்சில் வரையறுத்தது.
நீட் மூலம் நடைபெறும் சேர்க்கையில, தேசிய ஒதுக்கீடு அதாவது மாநிலங்கள் வழங்கக்கூடிய இடங்களில் (தமிழகம் 15 வழங்குகிறதே அது போல்) மத்திய அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அதாவது
1. தாழ்த்தப்பட்டோர் (SC) க்கு 15%
2. பழங்குடியினர் (ST) க்கு 7.5%,
3. இதர பிற்பட்டோர் பொருளாதார அடிப்படையில் (OBC NON CREAMY LAYER) 27%
4. மாற்று திறனாளிகள் (PHYSICALLY Challenged) 3% இட ஒதுகீடு வழங்கப்படும்.
1. தாழ்த்தப்பட்டோர் (SC) க்கு 15%
2. பழங்குடியினர் (ST) க்கு 7.5%,
3. இதர பிற்பட்டோர் பொருளாதார அடிப்படையில் (OBC NON CREAMY LAYER) 27%
4. மாற்று திறனாளிகள் (PHYSICALLY Challenged) 3% இட ஒதுகீடு வழங்கப்படும்.
மற்ற இடங்களுக்கான இட ஒதுக்கீடு அந்தந்த மாநில அரசின் கொள்கைகளின் அடிப்படையில் இருக்கும்.
நீட் தேர்வில் மொத்தம் 180 கேள்விகள் இயற்பியல் (physics), வேதியல் (chemistry), உயிரியல் (BIOLOGY) பாடங்களில் இருந்து இருக்கும். சரியான விடை ஒன்றிற்கு நான்கு மதிப்பெண்கள் அளிக்கப்பட்டும், தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைபட்டும், விடை எழுதாத கேள்விகளுக்கு மதிப்பெண் ஏதும் வழங்காமலும் விடைத்தாள் திருத்தம் இருக்கும்.
தகுதி பட்டியல் மெரிட் லிஸ்ட் marks percentile (மதிப்பெண் சதமாக) அடிப்படையில் இருக்கும், அதோடு தகுதி நிர்ணயம் தரவரிசை சதமாக, ranking percentile ஆக இருக்கும்.
Marks percentile என்றால் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் சதமாக கொண்டு கனகிடுதல், முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் 700 என்றால் அவரது percentile 100 ஆகும். ஒருவர் 650 மதிப்பெண் எடுத்தார் என்றால் அவரது pecentile 630/700 X 100 = 90 ஆகும்.
Ranking percentile என்பது தேர்வு எழுதிய மொத்த மாணவர் எண்ணிக்கையில் தர வரிசை என்னை கழித்து அதனை மொத்த மாணவர் எண்ணிக்கைக்கான சதமாக கணக்கிடுதல் ஆகும்.
நீட் தேர்வு ஏன் வெறும் நுழைவு தேர்வு என அழைக்கபடாமல் தகுதி நுழைவு தேர்வு என அழைக்கபடுகிறது என்பதற்கான விடை இங்கே தான் வருகிறது...
இத்தேர்வில் வெறும் தரவரிசை அல்லது கட் ஆப் மட்டும் போதாது மாறாக தகுதியானது ranking percentile மூலம் தீர்மானிக்கபடுகிறது.
குறைந்தபட்ச தகுதியானது
1. பொது பிரிவிற்கு (ஜெனரல் category) 50th percentile rank (சதமாக தர எண்)
2. SC/ST மற்றும் OBC க்கு 40th percentile rank (சதமாக தர எண்)
3. மாற்று திறனாளிகளுக்கு 45th percentile rank (சதமாக தர எண்) என்றும் நிர்ணயிக்கபடுகிறது. மேலும் இது ஆண்டுக்காண்டு மாற்றத்திற்குரியது ஆகும்.
1. பொது பிரிவிற்கு (ஜெனரல் category) 50th percentile rank (சதமாக தர எண்)
2. SC/ST மற்றும் OBC க்கு 40th percentile rank (சதமாக தர எண்)
3. மாற்று திறனாளிகளுக்கு 45th percentile rank (சதமாக தர எண்) என்றும் நிர்ணயிக்கபடுகிறது. மேலும் இது ஆண்டுக்காண்டு மாற்றத்திற்குரியது ஆகும்.
பிளஸ் டூ மதிப்பெண் சேர்க்கைக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளபடுவதில்லை எனினும் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
1. பொது பிரிவிற்கு (ஜெனரல் catogary) Physics, Chemistry, Biology/Bio-technology இல் மொத்தமாக 50%
2. SC/ST மற்றும் OBC க்கு 40%,
3. மாற்று திறனாளிகளுக்கு 45% என்றும் நிர்ணயிக்கப\ட்டுள்ளது.`
1. பொது பிரிவிற்கு (ஜெனரல் catogary) Physics, Chemistry, Biology/Bio-technology இல் மொத்தமாக 50%
2. SC/ST மற்றும் OBC க்கு 40%,
3. மாற்று திறனாளிகளுக்கு 45% என்றும் நிர்ணயிக்கப\ட்டுள்ளது.`
இதில் இறுதியாக சொல்லபடுவது தான் முக்கிய குறிப்பாகும் தேசிய அளவிலான 15% இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பட்டியல் CBSE வரையறுத்து பட்டியலை உரிய சேர்க்கைக்கு மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அனுப்பி வைக்கும்.
மீதமுள்ள அணைத்து இடங்களுக்கும் மாணவர்கள் தங்களது நீட் மதிப்பெண் மற்றும் தரவரிசை வைத்து மாநில அரசு அல்லது உரிய நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதாகும்.
மீதமுள்ள அணைத்து இடங்களுக்கும் மாணவர்கள் தங்களது நீட் மதிப்பெண் மற்றும் தரவரிசை வைத்து மாநில அரசு அல்லது உரிய நிர்வாகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்பதாகும்.
அப்படியெனில் தற்போது உள்ள நிலையிலேயே மாணவர்கள் தனியார் கல்லூரிகளில், தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்களின் கீழ் உள்ள கல்லூரிகளில் அனுமதிக்கு அவர்களின் நடைமுறையின்படியே அனுமதிக்கபடுவார்கள்.
தமிழகத்தில் இதுவரை மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழக அரசின் கலந்தாய்வு (COUNSELLING) மற்றும் தனியார் கல்லூரிகளின் நேரடி அனுமதியின் (DIRECT ADMISSION) மூலம் நடைபெறுகிறது. மருத்துவ கல்லூரிகள்
1. அரசு மருத்துவ கல்லூரிகள் (GOVERNMENT MEDICAL COLLEGES),
2. அரசு பல்கலைகழகத்தில் இணைக்கப்பட்ட தனியார் கல்லூரிகள் (PRIVATE MEDICAL COLLEGES AFFLIATED TO GOVERNMENT UNIVERSITY i.e DR.MGR MEDICAL UNIVERSITY),
3. தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகள் (PRIVATE MEDICAL COLLEGES UNDER DEEMED UNIVERSITIES)
என மூன்று பிரிவு உள்ளது.
1. அரசு மருத்துவ கல்லூரிகள் (GOVERNMENT MEDICAL COLLEGES),
2. அரசு பல்கலைகழகத்தில் இணைக்கப்பட்ட தனியார் கல்லூரிகள் (PRIVATE MEDICAL COLLEGES AFFLIATED TO GOVERNMENT UNIVERSITY i.e DR.MGR MEDICAL UNIVERSITY),
3. தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகள் (PRIVATE MEDICAL COLLEGES UNDER DEEMED UNIVERSITIES)
என மூன்று பிரிவு உள்ளது.
அரசு மருத்துவ கல்லூரிகளில் 85% மாநில அரசின் கவுன்செல்லிங் மூலமும், 15% மத்திய அரசின் மாணவர் சேர்க்கைக்கும் (CENTRAL GOVERNMENT QUOTA) வழங்கபடுகிறது.
அரசு பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் கல்லூரிகளில் அவை சிறுபான்மை கல்வி நிறுவனங்களாக (MINORITY EDUCATIONAL INSTITUTION) ஆக இருந்தால் 50% மும், சிறுபான்மை அல்லாத கல்வி நிறுவனங்களில் 65% மும் அரசு கவுன்செல்லிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது, மீதம் உள்ள இடங்களை அந்த கல்லூரிகளே நிரப்புகின்றன.
தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகளில் அணைத்து இடங்களையுமே அந்தந்த கல்லூரி நிரவாகமே செய்கிறது, ஒரே ஒரு இடம் கூட மாநில அரசின் கலந்தாய்வுக்கு வழங்கபடுவதில்லை.
இதில் ஒரு உண்மைநிலை, புதுவை மற்றும் கர்நாடகாவில் தனியார் நிகர்நிலை பல்கலைகழகங்கள் கீழ் செயல்படும் மருத்துவ கல்லூரிகளில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு குறிப்பிட்ட சதவீதம் இடம் ஒதுக்கபடுகிறது.
அதே நேரத்தில் தமிழகத்தில் செயல்படும் இரண்டு நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மருத்துவ கல்லூரிகள் உள்ளன, இதில் தமிழகத்தில் இயங்கும் கல்லூரியில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு இடம் தருவதில்லை ஆனால் புதுவையில் தருகின்றது. அதே போல் புதுவையில் செயல்படும் ஒரு நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மருத்துவ கல்லூரிகள் உள்ளன, அதுவும் தமிழகத்தில் இயங்கும் கல்லூரியில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு இடம் தருவதில்லை ஆனால் புதுவையில் தருகின்றது.
அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகள் எப்படி மாணவர் சேர்க்கை நடத்துகிறது?.
அரசு பல்கலைகழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம், இஸ்லாமிக் அகடெமி ஆப் ஏஜூகேசன் எதிர் கர்நாடக அரசு வழக்கில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதியினை முறைபடுத்த வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மாணவர் சேர்க்கை முறையாக நடத்த உறுதியளித்தார்கள்.
அப்படி உருவாககபட்ட அமைப்பு Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences என்பது ஆகும். முறையாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இந்த கல்லூரிகள் அனைத்தும் தன்னிச்சையாக, அவர்கள் நிர்ணயித்த அணைத்து கட்டணங்களை செலுத்தும் மாணவர்களை முதலில் சேர்த்துக் கொள்வார்கள்.
பின்னர் இந்த மாணவர்களுக்கு மேற்சொன்ன Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences வழங்கும் ஒரு பொது விண்ணப்பம் வழங்கப்படும், அதே போன்று இந்த தனியார் கல்லூரிகள் சேர்த்த மாணவர்களை மட்டுமே கொண்டு ஒரு தரப் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்கள் எல்லாம் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்படும்.
இதில் கொடுமையிலும் கொடுமை இத்தைகைய முறையற்ற மாணவர் சேர்க்கையினை Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences முறையானதாக தோற்றம் அளிக்க செய்யும் அரசு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறையற்ற செயலை கண்காணிக்க தமிழக அரசு ஒரு குழு “COMMITTEE TO REGULATE-MONITOR THE ADMISSION OF STUDENTS TO PROFESSIONAL COURSES BY SELF FINANCING PROFESSIONAL ARTS AND SCIENCES COLLEGES” இதன் உறுப்பினர் செயலாளராக (MEMBER SECRETARY) தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் (SECRETARY FOR HEALTH AND FAMILY WELFARE) இருக்கிறார்.
இதுபோன்ற குளறுபடிகளை சரி செய்தாலே, தகுதி அடிப்படையிலும், முறையாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.நீட் எந்த மாற்றத்தையும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கொண்டு வராது. மாறாக
1. மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்,
2. ஆங்கிலம் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு என்பது, மற்ற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு அநீதி ஏற்படுத்தும்.
3. தமிழகத்தில் தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறைக்கு ஆபத்து விளையும்.
4. கிராமப்புற மாணவர்களின் நியாயமான வாய்ப்புகள் பறிபோகும்.
5. ஏற்கனவே இருக்கும் கல்வி கொள்ளை கூடங்கள் போதாது என்று புதிதாக நீட் தேர்வுக்கான புதிய மைய்யங்கள் முளைக்கும் (ஏற்கனவே சென்னையில் நிறைய மைய்யங்கள் முளைத்துவிட்டன) இவைகளில் பெற்றோர்கள் கோடிக்கணக்கில் கல்லூரிக்கு கொடுப்பதை விட இலட்சக்கணக்கில் இந்த மைய்யங்களுக்கு கொட்டிக் கொடுப்பது புத்திசாலித்தனம் என அவற்றை மொய்ப்பார்கள்.
தற்போது இருக்கின்ற மாணவர் சேர்க்கை நடைமுறையினை ஒழுங்கு படுத்துவதை விட்டுவிட்டு நீட் புகுத்துவது ஒரு தெளிவற்ற, மக்கள் விரோத மாற்று முறையாகும், ஆக நீட் என்பது இருக்கும் கல்வி கொடுமைகளின் ஒரு நீட்சியே.
அதே நேரத்தில் தமிழகத்தில் செயல்படும் இரண்டு நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மருத்துவ கல்லூரிகள் உள்ளன, இதில் தமிழகத்தில் இயங்கும் கல்லூரியில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு இடம் தருவதில்லை ஆனால் புதுவையில் தருகின்றது. அதே போல் புதுவையில் செயல்படும் ஒரு நிகர்நிலை பல்கலைகழகத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் மருத்துவ கல்லூரிகள் உள்ளன, அதுவும் தமிழகத்தில் இயங்கும் கல்லூரியில் அரசின் மாணவர் சேர்க்கைக்கு இடம் தருவதில்லை ஆனால் புதுவையில் தருகின்றது.
அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகள் எப்படி மாணவர் சேர்க்கை நடத்துகிறது?.
அரசு பல்கலைகழகங்களின் கீழ் செயல்படும் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முறையாக நடைபெற வேண்டும் என உச்ச நீதிமன்றம், இஸ்லாமிக் அகடெமி ஆப் ஏஜூகேசன் எதிர் கர்நாடக அரசு வழக்கில், தனியார் மருத்துவ கல்லூரிகளில் அனுமதியினை முறைபடுத்த வேண்டும் என்பதற்கு சில வழிகாட்டுதல்களை வழங்கியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் மாணவர் சேர்க்கை முறையாக நடத்த உறுதியளித்தார்கள்.
அப்படி உருவாககபட்ட அமைப்பு Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences என்பது ஆகும். முறையாக மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த இந்த கல்லூரிகள் அனைத்தும் தன்னிச்சையாக, அவர்கள் நிர்ணயித்த அணைத்து கட்டணங்களை செலுத்தும் மாணவர்களை முதலில் சேர்த்துக் கொள்வார்கள்.
பின்னர் இந்த மாணவர்களுக்கு மேற்சொன்ன Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences வழங்கும் ஒரு பொது விண்ணப்பம் வழங்கப்படும், அதே போன்று இந்த தனியார் கல்லூரிகள் சேர்த்த மாணவர்களை மட்டுமே கொண்டு ஒரு தரப் பட்டியல் வெளியிடப்பட்டு அவர்கள் எல்லாம் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்படும்.
இதில் கொடுமையிலும் கொடுமை இத்தைகைய முறையற்ற மாணவர் சேர்க்கையினை Tamilnadu Private Professional Colleges Association - Health Sciences முறையானதாக தோற்றம் அளிக்க செய்யும் அரசு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைகழகத்தின் கீழ் செயல்படும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் முறையற்ற செயலை கண்காணிக்க தமிழக அரசு ஒரு குழு “COMMITTEE TO REGULATE-MONITOR THE ADMISSION OF STUDENTS TO PROFESSIONAL COURSES BY SELF FINANCING PROFESSIONAL ARTS AND SCIENCES COLLEGES” இதன் உறுப்பினர் செயலாளராக (MEMBER SECRETARY) தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செயலாளர் (SECRETARY FOR HEALTH AND FAMILY WELFARE) இருக்கிறார்.
இதுபோன்ற குளறுபடிகளை சரி செய்தாலே, தகுதி அடிப்படையிலும், முறையாகவும் மாணவர் சேர்க்கை நடைபெறும்.நீட் எந்த மாற்றத்தையும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் கொண்டு வராது. மாறாக
1. மாநில அரசின் உரிமைகள் பறிபோகும்,
2. ஆங்கிலம் இந்தி ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே தேர்வு என்பது, மற்ற மொழிகளை தாய் மொழியாக கொண்டவர்களுக்கு அநீதி ஏற்படுத்தும்.
3. தமிழகத்தில் தற்போது உள்ள இட ஒதுக்கீடு முறைக்கு ஆபத்து விளையும்.
4. கிராமப்புற மாணவர்களின் நியாயமான வாய்ப்புகள் பறிபோகும்.
5. ஏற்கனவே இருக்கும் கல்வி கொள்ளை கூடங்கள் போதாது என்று புதிதாக நீட் தேர்வுக்கான புதிய மைய்யங்கள் முளைக்கும் (ஏற்கனவே சென்னையில் நிறைய மைய்யங்கள் முளைத்துவிட்டன) இவைகளில் பெற்றோர்கள் கோடிக்கணக்கில் கல்லூரிக்கு கொடுப்பதை விட இலட்சக்கணக்கில் இந்த மைய்யங்களுக்கு கொட்டிக் கொடுப்பது புத்திசாலித்தனம் என அவற்றை மொய்ப்பார்கள்.
தற்போது இருக்கின்ற மாணவர் சேர்க்கை நடைமுறையினை ஒழுங்கு படுத்துவதை விட்டுவிட்டு நீட் புகுத்துவது ஒரு தெளிவற்ற, மக்கள் விரோத மாற்று முறையாகும், ஆக நீட் என்பது இருக்கும் கல்வி கொடுமைகளின் ஒரு நீட்சியே.
Tuesday, July 15, 2014
மண்ணாக போ! என்பது ஒருகாலத்தில் ஒருவருக்கு தரப்படும் சாபமாக கருதப்பட்டது, ஆனால் இன்று மண்ணாக போ என்பது வரமாக தான் அமைந்துவிடும்.
மண்ணாக போ! என்பது ஒருகாலத்தில் ஒருவருக்கு
தரப்படும் சாபமாக கருதப்பட்டது, ஆனால் இன்று மண்ணாக போ என்பது வரமாக தான்
அமைந்துவிடும். மணல், நம் நாட்டின் கட்டமைப்பு பணிகளில் ஒரு முக்கிய அங்கம், இதன்
தேவையினை உணர்ந்து அதனை சீராக நுகர்வோருக்கு தரவேண்டியது அரசின் கடமை என்பது ஒருபுறம் இருக்க, இந்த
மணலின் தேவை எந்த அடிப்படையில் உள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
ஒரு காலத்தில் கட்டிடங்கள் கட்டும் பணியில்
காரையின் (Concrete) தேவை சற்று குறைவாக அமைந்ததற்கு காரணம், குறுக்கு தூண்களும் (Beam), நெடும் தூண்களும் (Columns) மரத்தினால் அமைந்தது, ஓடு கூரைகளும் கூட இருந்தது, அதோடு
கற்சுவர்களும், பின் செங்கற்சுவர்களும் கொண்டு கட்டிடங்கள் அமைந்து இருந்தது.
தற்போதைய பணிகள் பிரேம்டு ஸ்டரக்சர் (FRAMED STRUCTURE) எனும் வகையில் கட்டிடங்கள் கட்டப்படுகின்றது.
இத்தகைய கட்டுமானங்களில் காரையின் பயன்பாடு அதிகமாகியுள்ளது.
காரை என்பது கல்லும், மண்ணும், சிமெண்டும்
சேர்ந்தது மட்டும் அல்ல, சற்று பெரிய அளவு பொருளும் (COARSE AGGREGATES), அதனோடு சிறிய அளவு பொருள்களை (FINE AGGREGATES) ஒரு பிணைப்பு பொருளோடு (BINDER) சேர்த்து உருவாக்கபடும் எதுவும் காரை தான்.
காரையில் பிணைப்பு ஏற்படுத்தும் பொருள் கொண்டு அந்த காரையினை அழைப்பது வழக்கம். கட்டுமான காரையினை
பொதுவாக காரை எனக்குறிப்பிட்டாலும், அதில் சிமெண்டு பின்னைப்பை ஏற்படுத்துவதால் அதனை
சிமென்ட் காரை (CEMENT
CONCRETE) எனச்சொல்வதே உரியதாகும். பெரிய ஜல்லி கற்களோடு,
சிறிய ஜல்லி கற்கள் மற்றும் துகள்களை தார் கொண்டு கலந்து சாலைகள் போடப்படுவதும்
காரைத்தான், இதில் தார் பிணைப்பை ஏற்படுத்துவதால், இதனை தார்க்காரை (ASPHALTIC CONCRETE/ BITUMINOUS CONCRETE) என்போம். இன்னும் சொல்லபோனால் கடலை மிட்டாய் கூட
பெரிய கடலைகளையும்,சிறிய கடலைகளையும் வெல்லப்பாகு கொண்டு சேர்த்து பிடித்து
வைப்பது கூட வெல்லக்காரையாக கொள்ளலாம்.
ஆக சிமென்ட் காரையின் சூத்திரம் அழைக்கபடுவது
கொள்ளளவின் (VOLUME) அடிப்படையில் முதலில் குறிப்பிடப்படும் எண் பிணைப்பு
பொருளையும், அடுத்து சிற்றளவு
பொருளையும் அடுத்து பெரியளவு பொருளையும் குறிக்கும். 1:2:4 காரை
என்பது ஒரு நிர்ணயிக்கப்பட்ட பாத்திரத்தில் ஒரு பங்கு கொள்ளளவு சிமெண்டும், இரண்டு
பங்கு மணலும், நான்கு பங்கு ஜல்லி கற்களும் ஆகும். இப்படியாக சிமென்ட் காரை
கட்டுமானத்தில் மணலின் தேவையினை உணர்ந்து கொள்ளலாம்.
இந்த மணலை நாம் பெறுவதற்கான ஒரே இடம் (SOURCE) ஆற்றுபடுகைகள், மணல்
கனிமங்கள் கீழ் கொண்டுவரப்பட்டு, அதனை கையாளும் அதிகாரமும், அவற்றுக்கான சட்டம்
இயற்றும் அதிகாரமும் மாநில அரசுகளிடம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் 2003க்கு முன்பு வரை,
மணல் குவாரிகள் வருவாய்த்துறை மூலம் தனியாருக்கு ஏலமிடப்பட்டு செயல்பட்டு வந்தது.
அத்தகைய குவாரிகளுக்கு லாரிகள் சென்று, மணலை ஏற்றி வரும். அன்றைய நிலையில்
குவாரிகள் என்பது சில கிலோமீட்டர்கள் ஆற்று படுகையிலேயே லாரிகள் சென்று மணல் ஏற்றி
வர வேண்டும். மணல் ஏற்றும் லாரிகள், ஆற்றுக்குள்ளே செல்ல வேண்டும் என்பதால் நல்ல
நிலையிலும், ஆற்றில் சிக்கிக்கொண்டால் மீண்டுவர சக்கரத்தில் வைக்ககூடிய உரிய தகடுகளையும்
கொண்டு செல்வர், மேலும் மணலை ஆட்கள் மூலம் தான் ஏற்ற முடியும் என்பதால் அந்த லாரியிலேயே
நான்கு அல்லது ஐந்து ஆட்களும் செல்வர். இந்த முறையில் பல தனி நபர்கள் பெரும் மணல்
குவாரி நடத்தி பெரும் கோடீஸ்வரர்களாகவும், அரசியல் அதிகார சக்திகளாகவும் வலம்
வந்தனர். இயந்திர வளர்ச்சி ஏற்படவும், மணல் மூலம் ஈட்டப்படும் வருமானம் பெருமளவில்
அரசின் கஜானாவை (EXCHEQUER) விட்டுச்சென்று தனியாரிடம் சேர்ந்து வந்தது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) பணி வெறும் வரைபட ஒப்புதல்கள் மட்டுமே வழங்குகிறது,???????????????????
சென்னை போரூர் அருகே உள்ள மௌலிவாக்கத்தில் பத்து மாடி கட்டிடம் விழுந்த உடன்
அதற்கு காரணங்களாக
· * கட்டுமான குறைபாடு
· * கட்டிடம் எழுப்பப்பட்ட இடத்தின் நிலத்தன்மை சரியில்லை
· * சி.எம்.டி.ஏ. வரைபடம் வழங்கியதில் முறைகேடு
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) ஆனது தனது பணியாக வெறும்
வரைபட ஒப்புதல்களை மட்டுமே வழங்குகிறது, அதன் உறுதித்தன்மைக்கு கட்டிட உரிமையாளரும்,ஒப்பந்தக்காரரும்,
அனுமதி பெரும் போது உத்திரவாதம் அளிக்கின்றனர் எனவே அவர்கள் தான் பொறுப்பு என
அமைச்சர் சட்டசபையிலேயே தெரிவிக்கிறார்.
சி.எம்.டி.ஏ. வின் அடிப்படை பனி கட்டிட வரைபட ஒப்புதல் வழங்குவது தானே, எனவே அமைச்சர்
சொல்வது சரி என்பதாக ஒரு தோற்றம், இவ்விஷயத்தை நாம் மேம்போக்காக பார்த்தால்
தோன்றும். ஆனால் ஆழ உண்மையினை தேடிப் பார்த்தால், இது சி.எம்.டி.ஏ. வின் அடிப்படை
பணியினையே தட்டி கழிக்கும் பார்வை என்பது புலப்படும்.
சி.எம்.டி.ஏ. எனப்படும் CHENNAI METROPOLITAN DEVELOPMENT
AUTHORITY அதாவது சென்னை பெருநகர
வளர்சிக் குழுமம் என்பதன் அமைப்பை பார்த்தால் அதை பற்றிய அல்லது
உருவாக்கத்தின் நோக்கம் புரியும்.
இக்குழுமத்தின் தலைவர் வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர்.
இதன் துணைத் தலைவர் ஒருவரை அரசு நியமிக்கும் , இதனை தவிர இதன் உறுபினர்கள் , சி.எம்.டி.ஏ. உறுபினர் செயலாளர், வீட்டு வசதி நகர்புற மேம்பாட்டு துறை அரசு செயலாளர்,
நிதித் துறை அரசு செயலாளர், தொழில் துறை அரசு செயலாளர், போக்குவரத்துத் துறை அரசு செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர்,
சென்னை குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர், நகர் ஊரமைப்பு இயக்குனர் ( Director, Ton and Country Planning) , சி.எம்.டி.ஏ வின் நகர தலைமை திட்ட அலுவலர்,
நெடுஞ்சாலைத்துறை ஹலைமை பொறியாளர், அரசின் தலைமை கட்டிட கலைஞர் (Chief Architect To Government), நகர் ஊரமைப்பு இணை இயக்குனர் (Joint Director, Ton and Country Planning), தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய தலைவர், தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய தலைவர்,
சட்டமன்ற உறுபினர்களில் இருந்து இருவர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளில் இருந்து
நால்வர், மற்றும் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பின செயலாளர், என்பது
தான் இதன் தலைமை வடிவமாகும்.
இப்படி அமைச்சர்,அரசின் மிக முக்கியமான நுட்பமான துறைகளின் செயலாளர்களாக உள்ள
ஐ.ஏ.எஸ். அலுவலர்கள் , அரசு பொறியாளர்கள், சட்டமன்ற, உள்ளட்சிமன்ற மக்கள் பிரதிநிதிகள்
அடங்கிய இந்த தலைமை வடிவ குழு தான் அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கான வரைபட
அனுமதியினை அனுமதியோடு (Planning
Permission – PP) வழங்குகிறது.
இப்படிப்பட்ட குழுவிற்கு வெறும் வரைபட அனுமதி வழங்குவது தான் பணியே தவிர ,
கட்டிட பணிகளை மேற்பார்வை செய்வதோ அல்லது, இடிந்து விழும் கட்டிடங்களுக்கு எந்த
வகையிலும் பொறுப்பேற்க முடியாது என இந்த குழுமத்தின் தலைவர் மாண்புமிகு தமிழக
வீட்டு வசதி நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர். திரு. வைத்தியலிங்கம அவர்கள்
சட்டசபையில் பொறுப்பாக பேசியுள்ளார்.
வெறும் வரைபட அனுமதி வழங்குதல் என்றால் வரைபடம் பார்த்து ஒப்புதல் வழங்கும்
திறன் கொண்ட வரைவாளர்கள் (Draughtsmen) மட்டுமே போதுமே, எதற்கு இத்தனை பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும், மக்கள் நலன்
சார்ந்து (???) செயல்பட கூடிய மக்கள் பிரதிநிதிகளும்.
இதில் சி.எம்.டி.ஏ. வின் பனி வெறும் வரைபட
அனுமதியோடு (Planning
Permission) PP நின்றுவிடவில்லை அது கட்டிடம் முடிந்த பின் பனி நிறைவு சான்று (Completion Certificate) CC வழங்க வேண்டும் என்பதும் விதி.
இப்படி ஒரு விதிமுறை
வகுக்கப்பட்டதின் அடிப்படை என்ன, என்பது எவருக்கும் வெகு சாதரணமாக தெரியும். வரைபட
அனுமதி பெற்றவர்கள் அதன்படி கட்டியுள்ளர்களா? என்பதை வரைபட அனுமதி அளித்த சி.எம்.டி.ஏ.
வே சரி பார்க்க வேண்டும் என்பது தானே?.
சரி வரைபட அனுமதி அளித்து விட்டு அலுவலகத்திலேயே
இருந்து கொண்டு சி.எம்.டி.ஏ. நிறைவு சான்று வழங்குவது தான் முறை என்றால், நிறைவு
சான்றுக்கு ஏதேனும் அர்த்தம் இருக்க முடியுமா?.
ஒவ்வொரு அலுவலருக்கும்மான பணியானது வெளிப்படையான அல்லது தெளிவுறுத்தப்பட்ட பனி
(Expressed Duty) என்பதும் புரிந்துக்கொள்ளப்பட்ட
பனி (Implied
Duty) என்பதாகவே அமையப் பெறும்.
அந்தவகையில் சி.எம்.டி.ஏ. வின் பனியானது வரைபட அனுமதி (Planning
Permission) PP மற்றும் பனி நிறைவு சான்று (Completion
Certificate) CC வழங்க வேண்டும் என்பது வெளிப்படையான அல்லது தெளிவுறுத்தப்பட்ட
பனி.
இதில் கட்டப்படும் கட்டிடத்தை அவ்வபோது நேரிடையாகவோ, உள்ளாட்சி அமைப்புகள்
மூலமாகவோ கண்காணிக்க வேண்டும் என்பது புரிந்துக்கொள்ளப்பட்ட பனி (Implied Duty) ஆகும்.
கட்டிடம் வரைபடத்தில் உள்ளபடி கட்டிட அடித்தளம் (Foundation)
போடப்படுகிறதா? என்பதை கட்டிட பனி துவங்கி நடக்கும் போது மேற்பார்வையிட்டு உறுதிப்படுத்தினால் தானே, கட்டிட பனி முடிந்து வழங்கப்படும் (Completion Certificate) பனி நிறைவு சான்றுக்கு ஒரு
பொருள் இருக்கும்.
இதில் அமைச்சர் சொல்லியுள்ள மற்றொரு கருத்து உறுதித்தன்மைக்கு கட்டிட உரிமையாளரும்,ஒப்பந்தக்காரரும்,
அனுமதி பெரும் போது உத்திரவாதம் அளிக்கின்றனர் எனவே அவர்கள் தான் பொறுப்பு
என்பதாகும்.
அரசின் பணிகளுக்கும், ஒப்பந்தகளுக்கும், இன்னும் பல பணிகளுக்கும், அப்பணி மேற்கொள்பவரிடம்
இது போன்ற உத்திரவாதங்களையும் (Guarantees and Indeminities) மேற்கொள்வது என்பது ஒரு வழிமுறை. இந்த வழிமுறையின் அடிப்படை பனி மேற்கொள்ளும்
தனி நபர் அல்லது நிறுவனத்தை கட்டுபடுத்தி அவர்களை பொறுப்பானவர்களாக இருக்க
செய்வதற்கு தானே அன்றி, அரசின், அரசு துறைகளின் பொறுப்பை அவர்கள் (தனி நபர் அல்லது
நிறுவனம்) மீது சுமத்துவதற்கு அல்ல.
தற்போது தமிழக அரசின் பல்வேறு சாலை, மற்றும் கட்டிடம் போன்ற ஒப்பந்த பணிகளில்,
அந்த பணியினை மேற்கொள்ளும் ஒப்பந்தகாரர் பணியினை ஒழுங்காக உரிய தரத்தில் ஒப்புக்
கொண்ட நிலையில் செய்து தர அரசுக்கு உத்திரவாதம் அளிக்கிறார். அப்படியென்றால் அரசு
அந்த பணிகளின் தன்மைக்கு ஒப்பந்தகாரரே பொறுப்பு என விட்டு விடாமல் நெடுஞ்சாலை,
பொதுபணிதுறை அதிகாரிகள் மூலம் உரிய மேற்பார்வை செய்வது ஏன்?. அந்த பணிகளுக்கான
உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிலையிலும் தரக் கட்டுப்பாடு சோதனை, தீடீர் ஆய்வு
போன்றவற்றை மேற்கொள்வது ஏன்?.
மேலும் சி.எம்.டி.ஏ. வின் பனி நோக்கம் பற்றி அவர்களது இணையதளத்திலேயே
“To provide a system of enforcement to monitor the
developments to be in
compliance with the rules.”
“பணிகள் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை கண்காணிக்க
ஒரு அமலாக்க முறையினை தருவது என்றும்.”
“Control and regulate the developments and thus
promote better living conditions.”
“பணிகளை கட்டுபடுத்தி முறைபடுத்தவும் அதன் மூலம் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்.”
கட்டிட அனுமதி குறித்த கேள்விகளில்,
பனி இடங்கள் ஆய்வு செய்யப்படுமா ? என்பதற்கு கண்டிப்பாக ஆய்வு
மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர (completion certificate) பனி நிறைவு சான்று வழங்கும் பணியானது
சி.எம்.டி.ஏ வின் அமலாக்க பிரிவுக்கு (Enforcement
Wing) தான் உண்டு. அந்த அமலாக்க பிரிவானது தனக்கு கட்டிட பணியினை சரிபார்க்கும் உரிமையும்
கடமையும் உள்ளதை
“EC shall monitor the developments periodically to
ensure compliance of the
approved plan and take necessary enforcement actions
where required as per the
delegated powers vested with the officials of EC.”
“அமலாக்க பிரிவானது அனுமதி அளிக்கப்பட்ட வரைபடத்தின்படி
பணிகள் நடைபெறுகிறதா என்பதை உரிய கால அளவில் கண்காணித்து, வழங்கப்பட்டு இருக்கும்
அதிகாரத்தின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு அமலாக்க பிரிவு
அதிகாரிகளை சாரும்” எனத் தெள்ள தெளிவாக எடுத்துரைக்கிறது.
வணிக நோக்கத்துடன்
அங்கீகாரமற்ற மற்றும் விதிகளுக்கு புறம்பாக கட்டப்படும் கட்டிடங்களினால் ஏற்படும்
ஆபத்துக்களையும் இடர்பாடுகளையும் எடுத்துச் சொல்லி பொது மக்களை எச்சரித்தல் என்று சி.எம்.டி.ஏ
குடிமக்கள் சாசனத்தில் குறிபிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்வது சி.எம்.டி.ஏ பனி இல்லையென்றால்,
அது எப்படி அங்கீகாரமற்ற மற்றும் விதிகளுக்கு புறம்பாக கட்டப்படும் கட்டிடங்களை
அடையாளம் காணுகிறது?.
அதே குடிமக்கள் சாசனத்தில் “அங்கீகாரமற்ற
கட்டிடங்கள் பற்றிய தகவல்களைத் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு
இக்குழுமத்திற்கும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி மன்றங்களுக்கும் தெரிவித்தல்.”
என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற கட்டிடங்கள் பற்றிய தகவல்களைத்
தந்தால் சி.எம்.டி.ஏ. தடுப்பு நடவடிக்கை எடுக்கும் என்றால், அதற்கு வரைபட
அனுமதியினை வழங்கும் பணியினை தாண்டி பணிகளை மேற்பார்வை செய்து கண்காணிக்கும் பொறுப்பு
உள்ளது என்று தானே அர்த்தம்.
ஆக எல்லா வகையிலும் எல்லா
சூழலிலும் சி.எம்.டி.ஏ, கட்டிடங்களின் கட்டுமான தரத்திற்கு பொறுப்பாகும் என்பது
தான் உண்மை நிலையாகும்.
இந்த கட்டிட விபத்து நிகழ்த்தவுடன், மேற்கொள்ளப்பட்ட அரசின் நடவடிக்கைகளும்,
இதற்கென போடப்பட்டுள்ள விசாரணை கமிஷனும், சிறப்பு புலனாய்வு குழுவும் பாராட்டுக்குரியதாக
நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில் அமைச்சர் அவர்களின் இந்த கருத்து அல்லது
தெளிவுருத்தல், அரசின் பொறுப்புணர்வின் மேல் சந்தேகத்தை எழுப்பும்.
இந்த விவகாரம் மட்டும் அல்ல பொதுவாகவே மக்களின் நலன் சார்ந்த அனைத்திலும்
அரசுக்கு பொறுப்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இரயில் விபத்திற்கே
மத்திய அமைச்சர் பதவியினை துறந்த மான்புமிகுந்த அமைச்சர்கள் இருத்த நம்
தமிழகத்தில், இன்றைய அமைச்சரின் பேச்சு பொறுப்பற்றதன்மையில், மக்கள்நலன் பற்றி
அக்கறையின்றி உள்ளது உள்ளபடியே வருந்ததக்கது.
எனவே அரசும் அமைச்சரும், சி.எம்.டி.ஏ. வின் நியாயமான பணியினை தட்டி கழித்து
பேசுவது, அந்த அதிகாரிகளுக்கு நிறைவாக இருக்கலாம், ஆனால் மக்களின் துன்பத்திற்கு
தீர்வாக அமையாது.
அமைச்சர் அவர்கள் மற்றுமொரு கருத்தை சட்டசபையில் பதிவு செய்து உள்ளார். தமிழகத்தில்
90% கல்லூரி கட்டிடங்கள் உரிய கட்டிட அனுமதி பெற்று கட்டப்படவில்லை, மாணவர்
படிப்பை கருதி நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இதில் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், கலைக்கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், போன்ற கல்லூரிகள் துவங்குவதற்கும் (Permission), தொடர்ந்து நடைபெறுவதற்கும் (Renewal Of Permission), உரிய கட்டிட அனுமதி
பெறவேண்டும் என்பது அவற்றுக்கான உரிய அனுமதியினை வழங்கும் அமைப்புகளான பல்கலைகழக
மானிய குழு (University
Grants Commission –UGC) அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் (All India Council For Technical Education – AICTE), இந்திய மருத்துவ கழகம் (Medical council
Of India – MCI), போன்றவற்றின் கட்டாய விதிமுறை.
அப்படி என்றால் உரிய கட்டிட அனுமதி இல்லாத இந்த கல்லூரி நிறுவனங்களுக்கு மேற்சொன்ன யு.ஜி.சி., ஏ.ஐ.சி.டி.இ. எம்.சி.ஐ. போன்ற அரசு
அமைப்புகள் எப்படி துவங்குவதற்கும் , தொடர்ந்து நடைபெறுவதற்கான அனுமதியினையும் வழங்கியுள்ளது?.
அனுமதியில்லா
கட்டிடங்களுக்கு அந்தந்த கல்லூரி நிறுவனங்கள் தவறான தகவல் அடிப்படையில் அனுமதிகளை
பெற்று உள்ளது என்றால் அவை மீது நடவடிக்கை தேவையில்லையா? இந்த கல்லூரிகளுக்கு உரிய
கட்டிட அனுமதி இல்லை என்பதை தெரிந்தே அந்த அமைப்புகளும் அனுமதி வழங்கியிருக்கிறது
என்றால் இது முறைகேடு இல்லையா?. இதற்கான விடையினை அமைச்சரும், அரசும் அளிக்க
வேண்டும் இல்லையா?
ஒரு வேலை அமைச்சர் சொல்வது போல் மாணவர் நலனில் அக்கறை இருக்கிறது என்பது உண்மை
என்றால், அவர் மாணவர்கள் பாதுகாப்பற்ற, உரிய அனுமதியில்லாத கட்டிடங்களில் படிப்பது
அவர்களின் உயிருக்கும், எதிர்காலத்திற்கும் ஆபத்தை விளைவிப்பதை பற்றியல்லவா கவலை
கொள்ள வேண்டும்.
ஆக அமைச்சர் சி.எம்.டி.ஏ விற்கு இந்த விபத்திற்கான பொறுப்பு இல்லை என்கிற
தவறான நிலையினை தெளிவுபடுத்த முனைந்து, அரசின் பிற அமைப்புகளும் பொறுப்பற்று
நடப்பதற்கு சான்றாய், அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்களில் தான் தமிழகத்தின் 90% கல்லூரிகள் இயங்குகின்றன
என்கிற ஒப்புதல் வாக்குமூலத்தை அளித்து, தனது பணியினை பொறுப்பாய் சிறப்பாய் செய்து
இருக்கிறார்.
இனிவரும் காலங்களில் சி.எம்.டி.ஏ வும் உள்ளாட்சி அமைப்புகளும் ஒருகிணைந்து
கட்டிட வரைபட அனுமதி வழங்குதல் என்கிற நிலையினை தாண்டி உரிய கண்காணிப்பு பணியினை
மேற்கொள்ள வேண்டும். இதற்க்கு தற்போதைய சட்ட திட்டங்களின் படியே உரிய அதிகாரமும்
பொறுப்பும் உள்ளது. இது தொடர்பாக அரசு ஒரு தெளிவான வழிகாட்டுதலை உடனடியாக
வெளியிட்டு இனி இது போன்ற விபத்துக்கள் நடைபெறாமல் இருக்க வழிவகுக்க வேண்டும்.
****************************பொறியாளர்.எஸ்.எஸ்.பாலாஜி***********************************
Monday, September 30, 2013
மக்களவை தேர்தலில் தமிழகத்தின் அணிகள்
எனது இந்த பதிவின் நோக்கம், வரவிருக்கும் மக்களவை
தேர்தலில் தமிழகத்தின் அணிகள் எப்படி அமையக்கூடும் என்பதை அலசுவது தான். இதனை நான்
சார்ந்து இருக்கும் இயக்கத்தின் கருத்தாகவோ, அல்லது நிலையாகவோ நான் நிச்சயம்
வெளிபடுத்தவில்லை.
தமிழகத்தின் அரசியல் சூழல் பொதுவாக மற்ற
மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.
இங்கு தான் நாட்டின் இரண்டு பிரதான கட்சிகளும் நான்காம், அய்ந்தாம் நிலைகளில்
உள்ளது. பக்கத்தில் உள்ள ஆந்திராவில் காங்கிரஸ் வலிமையாக உள்ளது, கர்நாடகாவில்
காங்கிரஸ், பி.ஜே.பி. இரண்டும் வலிமை, கேரளாவில் காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதிக்கம், அவ்வளவு
ஏன் பாண்டிச்சேரியில் கூட காங்கிரஸ் தாக்கம் அதிகம். இது நாட்டின் தென் பகுதியில்
மட்டும் அல்ல, மத்திய, வட இந்தியாவில் அணைத்து மாநிலங்களிலும் தேசிய கட்சிகள்
ஒன்றுக்கு மேற்பட்டவையின் ஆதிக்கம் நிச்சயம்.
தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க ஆகியவை
பிரதானமாக இருந்தாலும், அவைகளின் வெற்றி தோல்வி பெருமளவு கூட்டணி கட்சிகளை
பொறுத்தே அமையும். இங்கு தேசிய கட்சியான காங்கிரஸ் வாக்கு பலம் இல்லையென்றாலும்
அது மாநிலம் முழுதும் அறியப்பட்ட கட்சி, பி.ஜே,பி.யின் நிலை அதுவன்று. அடுத்து
வாக்கு வங்கி என வரும் போது அ.தி.மு.க., தி.மு.க அடுத்த நிலையில் காங்கிரஸ், தே.மு.தி.க.,
ம.தி.மு.க., வி.சி.க., பா.ம.க., சி.பி.எம், சி.பி.ஐ. ஆகியவை, ம.ம.க., புதிய
தமிழகம் பி.ஜே.பி உள்ளிட்ட மற்ற கட்சிகள் அடுத்த நிலையில்.
தேர்தல் முடிவை தீர்மானிக்ககூடிய அம்சங்களில், கட்சிகளின் தற்போதைய நிலையென்ன?
தேசிய அளவிலான பிரச்சனைகள் தமிழக வாக்காளர்களை
குறிப்பாக புறநகர் பகுதிகளில் பாதிப்பதில்லை. ஆனால் நிலையான ஆட்சி என்பதற்கு செவி
சாய்ப்பார்கள். அதே நேரத்தில் மாநில அரசியலுக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.
இன்றைக்கு மக்கள் முன் இருக்கும் விவகாரங்கள்
அல்லது தேவைகள் மின்சாரம், பாசனத்திற்கு நீர் அது காவிரி,முல்லை பெரியார், தமிழீழ
போராட்டம், மதசார்பின்மை.
இதில் தமிழீழ போராட்டத்தை பொறுத்தவரை தேசிய
கட்சிகள் காங்கிரஸ், பி.ஜே.பி. மற்றும் இடது சாரிகளின் நிலை ஏறக்குறைய ஒன்றே.
இங்குள்ள பிரதான கட்சிகள் அ.தி.மு.க., தி.மு.க
கடந்தகாலங்களில் இருந்த நிலையில் சற்று மாற்றி வந்துள்ளது என்றாலும் தமிழ் ஈழம்
தான் ஈழ பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு என அறிவிக்க தயக்கம் கொண்டவை.
தமிழ் ஈழம் என வலியுறுத்தும் கட்சிகள் அல்லது
வெளிப்படையாக செயல்படும் கட்சிகள் ம.தி.மு.க., வி.சி.க., மட்டுமே. இதில் தேர்தலில்
ஈடுபடாத இயக்கங்கள் சார்ந்து நிற்பது ம.தி.மு.க.வுடன்.
மதசார்பின்மை என வரும்போது காங்கிரஸ், இடதுசாரிகள்
தேசிய அளவிலும், இங்குள்ள அணைத்து கட்சிகளும் அந்த நிலையில் தான் இருப்பதாக
சொல்கின்றனர். இதனை ஏற்பவர்களும், மறுபவர்களும் இருந்தாலும் பி.ஜே.பி மதசார்புள்ள
நிலைப்பாடு கொண்ட கட்சி என்பதை அனைவரும் ஏற்று கொள்கிற நிலை.
அ.தி.மு.க மதச்சார்பற்றதாக சொன்னாலும், பி.ஜே.பி.
யோடு இணைந்து செயல்படக்கூடிய கட்சிகளில் முதன்மையானதாகும். இன்றைய சூழலில்
அ.தி.மு.க., இடதுசாரிகள் ஒன்றாகவும், தி.மு.க. வி.சி.க. ஒன்றாகவும் செயல்பட்டு
வருகிறது இந்த அணி காங்கிரஸ் கட்சியோடு முரண்படாமல் இருக்கிறது. தே.மு.தி..க, ம.தி.மு.க,
பா.ம.க., ம.ம.க., பி.ஜே.பி. புதிய தமிழகம் ஆகியவை எந்த அணியில் சேரும் ?
தமிழீழ பிரச்சனை இன்றைக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்த
கூடியதாக உள்ளது. இன்னும் குறிப்பாக இந்த பிரச்சனை தமிழீழ விடியல் என்கிற
பார்வையில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை, மாறாக காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற
நிலையில் அது கூராக்கபட்டு இருக்கிறது. ஆக இந்த காங்கிரஸ் எதிர்பை அ.தி.மு.க.
சாதகமாக்கி கொள்ள முயலும்.
அதே வேளையில், அதனை தனது பக்கம் திருப்பி கொள்ள
ம.தி.மு.க. காய்களை நகர்த்துகிறது. அதனால் தான் தீவிர காங்கிரஸ் எதிர்ப்பு,
மாணவர்கள் போராட்டத்தை தங்கள் வசபடுத்தி அவர்களுக்கு போரட்ட களத்திற்கு தேவையான வசதி வாய்ப்புகளை செய்து கொடுத்தது என
அடுக்கலாம்.
தே.மு.தி.க. காங்கிரஸ் பக்கம் சாய்ந்து, தி.மு.க.வுடன்
அணி சேர்வதா அல்லது பி.ஜே.பி. ம.தி.மு.க. அணியில் இடம் பெறுவதா என்கிற குழப்பம்.
தனித்து போட்டி என பறைசாற்றி வரும் பா.ம.க.
நிச்சயம் ஒரு கூட்டணியில் இடம்பெறும், அப்படி அவர்கள் இடம் பெறுவது மூன்றாவது
அணியில் எனும் போது அவர்களும் மீசையில் மண் ஒட்டவில்லை என கூற வாய்பளிக்கும்.
தி.மு.க. இன்றுவரை காங்கிரஸ் அணிக்கு ஆதரவாக செயல்பட்டாலும்
அது இப்படியே இருக்கும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. ஒருபுறம் நாடெங்கிலும்
காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான மனநிலையோடு, தமிழ் தேசியவாதிகள் எதிர்ப்பு
கருத்துருவாக்கம் உள்ள நிலை நிச்சயம் தி.மு.க. அறியும் எனவே காங்கிரஸ்
இல்லாமல் தேர்தலை சந்திக்க முன் வரலாம்.
இன்றைய சூழலில் அ.தி.மு.க. அணிக்கு ஒரு பலம், அவர்களது
மாநில அரசின் கடமைகளை தவறி இருந்தாலும் அதற்கு காரணம் அந்த அதிகாரங்கள் மத்திய
அரசிடம் தான் இருக்கிறது என்றும், நாற்பது ஜெயித்தால் பிரதமர் என்கிற பிரச்சாரமும்
ஒரு சாராரிடம் எடுபடும் என்பது உண்மை நிலை. இந்த அணி மேலும் வலிமையுற தமிழ் தேசிய
கட்சிகளை இணைக்கும் வாய்ப்புகளை பார்த்து வருகிறது.
எனது தனிப்பட்ட பார்வையில் உருவாகக்கூடிய அணிகள்
அ.தி.மு.க. தலைமை தி.மு.க. தலைமை
உள்ளவை இடது
சாரிகள் வி.சி.க.
வரக்கூடியவை ம.தி.மு.க. காங்கிரஸ், தே.மு.தி.க., புதிய தமிழகம்
ஊசலாட்டம் ம.ம.க. பா..ம.க
மூன்றாவது அணி வாய்ப்பு : பி.ஜே.பி., ம.தி.மு.க,
பா.ம.க.
இதில் ஒருவேளை தி.மு.க.கூட்டணியில் காங்கிரஸ்
இல்லையெனில் (தி.மு.க.,தே.மு.தி.க., வி.சி.க.) மூன்றாவது அணி வலுப்பெறுவது, தி.மு.க.கூட்டணிக்கு
நன்மை தரும்.
Subscribe to:
Posts (Atom)

