அரசு, பெற்றோர் வாக்குகளும் வேண்டும் அதே நேரத்தில் பதவியில் உள்ளவர்களுக்கு பள்ளி நிறுவனகளிடமிருந்து நிதி ஆதாரமும் வேண்டும், என்பதால் முதலில் வாக்குகளுக்காக கட்டணம் சீரமைக்க கமிட்டி போட்டது , அதில் எழுந்த பிரச்சனைகளால் செய்வது அறியாமல் திகைத்து இப்போது நீதிமன்றம் இருக்கும் திசை நோக்கி கையினை காட்டுகிறது.
பெற்றோர்கள் பள்ளிகள் நியாயமான கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று கோருவது நியாயம் தான் ஆனால் , அவர்கள், நியாயமாக நடந்து கொள்கிறார்களா என்று எண்ணி பார்க்க வேண்டும். எந்த பள்ளி நிர்வாகமும் அவர்களை தங்கள் பள்ளியில் கண்டிப்பாக அவர்கள் பிள்ளையினை சேர்க்க வேண்டுவதில்லை. பெற்றோர் தான் அந்த பள்ளியில் படித்தால் ஆங்கிலம் நன்றாக பேசலாம், பொது தேர்வில் நிறைய மதிப்பெண் பெறலாம், அங்கு நீச்சல் குளம் உள்ளது அங்கு பெரிய மனிதர்கள் பிள்ளைகள் படிகிறார்கள் என்றெல்லாம் சிலேகித்து அந்த பள்ளிகளில் சேர்கிறார்கள்.அவர்கள் பிள்ளைகள் சுற்று சூழலினை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என நினைப்பதில்லை எதிலும் நியாயமாக, நேர்மையாக நடக்க வேண்டும் என சொல்லி தருவதில்லை, ஆனால் படித்து நன்றாக சம்பாதிக்க வேண்டும் அதுவும் எப்படிவேண்டுமானாலும் சம்பாதிக்க வேண்டும் என்கிற நோக்கோடு இது போன்ற பள்ளிகளில் சேர்க்க விரும்புகிறார்கள்.
பள்ளிகளில் இவர்களிடம் அதிக கட்டணம் வாங்குவது எப்படி தவறோ அதே போல் இவர்கள் பேராசையும் தவறே. இன்னும் ஓர் வேடிக்கை வினோதம் என்னவென்றால் பள்ளிகளில் கட்டணம் அதிகம், சமுக விரோதம் என போராடும் இந்த பெற்றோரில் பலர் இந்த பிள்ளைகள் பள்ளி இறுதி தேர்வில் மதிப்பெண் குறைவாக பெற்றால், கல்லூரியில் சேர capitation fees அதாவது நன்கொடை என்கிற பெயரில் லஞ்சம் கொடுத்து இடம் பெரும் அவலத்தினை அரங்கேற்றுவார்கள்.
சரி அப்படியென்றால் பள்ளிகள் செய்வது சரியா?. பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து, தகுதியான ஆசிரியர்களை நியமனம் செய்து வாங்கும் கட்டண தொகையினை முறையாக பயன்படுத்த வேண்டும். நியாயமான வருமானம் போதும் என்றும், எதிர்கால சமுதாயத்தினை உருவாக்கும் இவர்கள் அவர்களுக்கு சேவை மனப்பான்மை வளர வழி காட்ட வேண்டுமே தவிர, அவர்களிடத்தில் பணத்தினை அடித்து பிடுங்கி எதிர்காலத்தில் அந்த பிள்ளைகள் கறவை மானபாங்கினை பெற கூடாது.
அரசும் அது நடத்த கூடாதது மதுக்கடை , நடத்த வேண்டியது பள்ளிகள் என்பதை உணர வேண்டும். குறைந்தபட்சம் அணைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து முறைபடுத்த வேண்டும். வாக்குகளுக்கு அரசு நடத்தினால் அவர்கள் பொருளாதாரம் உயரலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கையினை வரலாறு ஆதாரம் இன்றி அழித்துவிடும்.
அரசும் அது நடத்த கூடாதது மதுக்கடை , நடத்த வேண்டியது பள்ளிகள் என்பதை உணர வேண்டும். குறைந்தபட்சம் அணைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து முறைபடுத்த வேண்டும். வாக்குகளுக்கு அரசு நடத்தினால் அவர்கள் பொருளாதாரம் உயரலாம், ஆனால் அவர்கள் வாழ்க்கையினை வரலாறு ஆதாரம் இன்றி அழித்துவிடும்.