Sunday, August 14, 2011

இட ஒதுக்கீடு - ஆரக்சன்

திடீரென இப்போது இட ஒதுக்கீடு எதிரான பிரசாரம் அதுவும் திரைப்படம் மூலமாக மிகவும் பிரபலமான நடிகர் அமிதாப் பச்சன் குரலில் திரையில் காட்டி அதன் மூலம் ஆதிக்க சக்திகள் உள்ள்நோக்க பிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளர்கள்.
 

இட ஒதுக்கீடு தரபட்டதின் அடிப்படை என்ன, ஒரு ஓட்ட பந்தய போட்டி ஆரம்பித்ததை தெரிவிக்காமல் ஓட ஆரம்பித்தது ஆதிக்க சாதி மக்கள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் ,தந்தை பெரியார் போன்ற சமூக நீதி தலைவர்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் நலன் காக்க வெகு தொலைவில் ஓடி செல்லும் ஆதிக்க சாதி மக்களை தொட வேண்டும் என  இட ஒதுக்கீடு அளிக்க வழிவகை செய்தனர். இன்று கொஞ்ச தூரமே ஒடுக்கப்பட்ட மக்கள் ஓடி வந்துள்ள நிலையில், இதனை தாங்காமல் ஓலமிடுகின்றனர்.

இட ஒதுக்கீடு அளிக்கபடுவதால் குறைந்த மதிப்பெண் பெற்ற ஒடுக்கப்பட்ட மக்கள், அதிக மதிப்பெண் பெறும்  ஆதிக்க சாதி மக்களின் இடத்தை பிடிப்பதாக பிதற்றுபவர்கள்,ஒரு சில மதிப்பெண்கள் மட்டுமே குறைவாக பெற்று இட ஓதிக்கீடால் இடம் பிடிப்பதை பெரிதாக பேசுகிறீர்கள் ஆனால் பல மதிப்பெண்கள் குறைவாக பெற்றும் சில லட்சங்கள் முதல் பல கோடிகள் வரை செலவு செய்து எத்தனை படிப்புகளில் ஆதிக்க சாதியினர் சேருகிறீர்கள், இது மோசடி இல்லையா?, இந்த பொருளாதார பலம் உங்களுக்கு வந்தது, ஒடுக்கபட்டோரின் நியாயமான உரிமைகளை பல நூறாண்டுகள் பறித்ததால் தானே?.இன்றைக்கு ஏதோ நியாயமாக பேசுவது போல் நடந்து கொள்வது ஒடுக்கப்பட்டோர் உங்களை வந்து தொடும் தூரம் குறைந்து வருகிறது என்கிற அச்சத்தால் தானே ?.        

No comments:

Post a Comment