NDTV says TV ratings manipulated. Slaps $1.39 billion lawsuit on TAM India and global parent firms Nielsen & Kantar
தொலைகாட்சிகளில் வெளிவரும் விளம்பரங்களுக்கான கட்டணத்தை நிர்ணயிப்பது,
அந்த விளம்பரம் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் பார்வையாளர்களின்
எண்ணிக்கையினை பொருத்து அமையும்.
சரி இந்த அளவுகோல் அல்லது பார்வையாளரின் எண்ணிக்கையினை தெரிந்து கொள்வது எப்படி?.
அதனை யார் செய்வது?.
இதனை செய்வது TAM, என்கிற அமைப்பு. இதன் விரிவாக்கம் TELEVISION AUDIENCE MEASUREMENT,தொலைக்காட்சி பார்வையாளர் அளவு என்பதாகும்.
இவர்கள் ஓவ்வொரு நிகழ்சிக்கான புள்ளிகளை வழங்குகின்றனர் அந்த புள்ளிகளை
தான் TRP , TELEVISION RATING POINT தொலைக்காட்சி பார்வையாளர் நிர்ணய
புள்ளி என்பதாகும்.
விளம்பரங்கள் ஒளிபரப்பு கால அளவானது பத்து
நொடிகளாக பிரிக்கபடுகிறது, பத்து நொடி என்பதை ஒரு FCT என சொல்லபடுகிறது.
FCT என்பது FREE COMMERCIAL TIME, இலவச வர்த்தக நேரம் ஆகும். ஒவ்வொரு அரை
மணி நேர நிகழ்ச்சிக்கும் 240 நொடி முதல் 300 நொடி வரை வழங்கப்படும், அதாவது
24 FCT முதல் 30 FCT வரை.
இந்த ஒரு FCT யின் விலையினை
நிர்ணயிப்பது TRP ஆகும். அதிலும் நிகழ்சிகள் ஒளிபரப்பாகும் நேரத்தை இரண்டாக
பிரிக்கின்றனர் தொலைக்காட்சி நிறுவனங்கள், PRIME TIME (முக்கிய நேரம் )
,NON -PRIME TIME (முக்கியமற்ற நேரம் )என்பதாகும். PRIME TIME என்பது
வழக்கமாக மாலை 7 மணியிலிருந்து 9 மணி வரையாக இருக்கும், மற்ற நேரங்கள் NON
-PRIME TIME . பொதுவாக PRIME TIME இல் ஒரு FCT யின் மதிப்பு ஒரு TRP
புள்ளிக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து இரண்டாயிரம் ரூபாய் வரை இருக்கிறது.
ஒரு புரிதலுக்காக சொல்வதென்றால், சன் தொலைக்காட்சி செல்லமே தொடரின் TRP 24
என்றால் அதில் ஒரு FCT க்கு 24000 முதல் 48000 ரூபாய் வரை விளம்பர
கட்டணமாகும்.
சரி TAM எப்படி TRP யினை கணக்கிடுகிறது ?.
TAM நிறுவனம் ஆய்வு செய்வதற்கு ஒரு நகரத்தின் சனத்தொகைக்கு ஏற்றவாறு
பல்வேறு இடங்களில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் இணைப்பில் மீட்டர்கள்
பொருத்தப்படுகிறது. இந்த மீட்டர்களை பார்வையாளர்களின் மாதிரி அளவாக (SAMPLE
) கொண்டு அந்த மீட்டரில் பார்வையாளர் எந்தெந்த நேரங்களில் எந்தெந்த
நிகழ்சிகளை பார்கிறார்கள் என்பதையும், அந்த மீட்டர் பொருத்தபட்டுள்ள
வீட்டில் உள்ள பல்வேறு வயதினரையும் கணக்கில் எடுத்து, ஒரு நீண்ட கணித
ஆய்வினை செய்து TRP புள்ளிகளை கணக்கிட்டு வெளியிடுகிறது. இதனை ஒவ்வொரு
வாரமாக கணக்கிட்டு அதற்கடுத்த வாரம் வியாழக்கிழமை TAM நிறுவனத்தில் இதற்கென
பதிவு செய்து கட்டணம் ( ஒரு பதிவிற்கு ஆண்டொன்றிற்கு பத்து முதல்
பதினைந்து லட்சம் ருபாய் ) செலுத்தும் தொலைக்காட்சி நிறுவனங்கள், விளம்பர
நிறுவனங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு அனுப்பி
வைக்கிறது.
சரி இதில் என்ன இப்பொழுது என்றால், பலகாலங்களாக பல
தொலைக்காட்சி நிறுவனங்கள் TAM நிறுவனத்தின் கணக்கீட்டு முறையில் சந்தேகம்
எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இன்று NDTV தொலைக்காட்சி நிறுவனம், TAM
மீது அதன் புள்ளிகள் கணக்கீட்டு முறையால் ஏற்பட்ட இழப்பீடாக 810 கோடி
டாலரும், TAM நிறுவனத்தின் கவனக்குறைவிற்கான இழப்பீடாக 580 கோடி டாலரும்
கேட்டு வழக்கு தொடுத்து இருக்கிறது.
இங்கே தமிழகத்தில் கூட
பிரபலமாக இருக்கும் ஒரு தொலைக்காட்சி நிறுவனம்,ஆரம்ப கட்டத்திலேயே TAM
நிறுவனத்துடன் இணக்கமாகி , ஒட்டுமொத்த CABLE TV NETWORKகில் அதற்கு இருந்த
அசைக்க முடியாத பலத்தை துணை கொண்டு, TAM நிறுவன மீட்டர்களை பொருத்தும்
இடத்தையே தனக்கு சாதகமாக்கி , தனது விளம்பர வியாபாரத்தில் மிகப்பெரிய
லாபத்தை சம்பாதித்து, இன்று தமிழ் தொலைக்காட்சி உலகில் தன்னிகரில்லா
நிறுவனமாக தழைத்து நிற்க காரணமாக சொல்லபடுகிறது.
மேலும் TAM மின்
கணக்கீடு பெருநகரத்தில் மட்டும் தான் என்பதால், கிராம மற்றும் சிறு நகர
பார்வையாளர்கள் கணக்கில் வராத ஒரு கணக்கெடுப்பு எப்படி சரியாக இருக்கும்
என்பது ஒரு கேள்வி.
அதோடு இந்த கணக்கெடுப்பில் வெறும் கேபிள்
நெட்வொர்க் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுகிறது, இதில் DTH மற்றும் SET TOP
BOX இணைப்புகள் கணக்கில் வருவதில்லை.
DTH மற்றும் SET TOP BOX களை கணக்கில் கொண்டு TRP யினை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு TAM அல்லாத ஒரு நிறுவனம் வெளியிட்டது.
மேற்சொன்ன தன்னிகரில்லா தொலைக்காட்சி நிறுவனத்தின் குடும்ப பிரச்சனையால்
உருவான இன்னொரு கலை நயமிக்க தொலைக்காட்சி நிறுவன தலைமை பொறுப்பை ஏற்று
இருந்த, ச... ரெட்டி, இந்த புதிய நிறுவனத்தின் TRP யினை கணக்கில் கொள்ள
வேண்டும் என மிகப்பெரிய முயற்சிகளை செய்தார். அவரது முயற்சி
வெற்றியடைந்தால் தங்களது முதல் நிலை பாதிப்புக்குள்ளாகிவிடும் என அந்த
நிறுவனம் குடும்ப பிணக்கை உடனே முடிவுக்கு கொண்டு வந்தது.
சரி இதெல்லாம் சாதாரண மக்களாகிய , வெறும் தொலைக்காட்சி பார்ப்பதோடு நிறுத்திவிடுகிற நமக்கென்ன ?. இருக்கிறது…………
இந்த TAM நிறுவனத்தின் முறையற்ற TRP புள்ளி கணக்கிடுதலால், விளம்பர தரும்
ஒரு நிறுவனம் தேவைக்கு அல்லது தகுதிக்கு அதிகமான தொகை செலவிடுகிறது.
நாம் அனைவரும் அறிந்த உண்மை தொலைகாட்சியில் பெரும்பாலும் வரும்
விளம்பரங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பற்பசை, முகப்பவுடர்,
சோப்பு,தேங்காய் எண்ணெய், சமையல் எண்ணெய் , கோதுமை மாவு, இப்படி பல
பொருட்கள். அளவுக்கு அதிகமான விளம்பர தொகையினை அந்த நிறுவனம் யார் தலையில்
கொண்டு வந்து சேர்க்கும்?, நம்மை போன்ற மக்கள் தலையில் தான்.
இன்றைக்கு ஊழலை ஒழிக்க லோக் பால் மசோதா வேண்டும் என குரல் கொடுக்கும்
நபர்களும் சரி அல்லது மற்றவர்களும் சரி மேற்சொன்ன முறைகேடும் ஒரு ஊழல் தான்
என்பதை தெரிந்தும் இதை பற்றியெல்லாம் பேச மாட்டார்கள். காரணம்
தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு SPONSOR செய்யும் நிறுவனங்கள் தான் இவர்களது
போராட்ட ஷோ களுக்கும் SPONSOR .
இது போன்ற ஊழல்கள் மட்டும்
அல்லாது, மற்ற ஊழல்களுக்கும் வழி வகுக்கும் CORPORATE HOUSE எனப்படும்
வர்த்தக நிறுவனங்களையும் லோக் பால் மசோதாவில் கணக்கில் கொண்டு அவர்களையும்
தண்டிக்க வழி வகுக்க வேண்டும் என நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும்
முழங்கி வரும் ஒரே தலைவர், மக்கள் நலனில் அக்கறையுள்ள உண்மையான தலைவர்,
மேன்மையாளர் எழுச்சித் தமிழர் அவர்கள் மட்டும் தான்.