தோழர் செங்கொடி இன்று தமிழ் தேசிய விடுதலை களத்தின் அணையாத ஜோதி, இவரின் ஒளியேற்றம் தலித் விடுதலை களம். காஞ்சிபுரம் மக்கள் மன்றமும் விடுதலைச்சிறுத்தைகளும், ஒரு தாய்வயிற்று பிள்ளைகள் போன்ற உறவு கொண்டது என்பதும், இன்னும் குறிப்பாக காஞ்சி மாவட்ட விடுதலைச்சிறுத்தை நிர்வாகிகள் விடுதலைச்செழியன்,பார்வேந்தன் போன்றோருடன் தினமும்,கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கௌதம சன்னா, வன்னி அரசு,இளஞ்சேகுவாரா, ஆகியோருடன் அடிக்கடியும், முக்கிய முடிவுகள் போராட்டங்கள் எடுக்கும் நிலை வரும் போது தலைவர் எழுச்சித்தமிழர் மேண்மையாளர் அவர்களுடனும் தொடர்பு நிலையில் உள்ளவர்கள் தான் மக்கள் மன்ற ஒருங்கிணைபாளர்கள் தோழர் மகேசும்,தோழர் ஜெஸியும்.
தலித் மற்றும் ஓடுகபட்டோர் விடுதலை என்பது மட்டும் அல்ல தமிழ்த்தேசிய விடுதலையும் உயிர்மூச்சு என்கிற எழுச்சித்தமிழர் மேண்மையாளர் அவர்களின் கருத்தியலினை உள்வாங்கியவர்கள் தான் மக்கள் மன்ற போராளிகள். மரண தண்டனை மாநாட்டினை அன்று எழுச்சித்தமிழர் மேண்மையாளர் தலைமையேற்று உணர்ச்சிமிகுந்து நடத்தி கொண்டிருக்கும் போது தான் அந்த இடிச்செய்தி அவரை தாக்கியது.இது போன்ற தியாகத்தை யார் செய்ய துணிந்தாலும் துடிதுடிக்கும் எழுச்சித்தமிழர் மேண்மையாளர், தியாகதீபமானது தனக்கு நன்கு அறிமுகமான தங்கை சரஸ்வதி என்கிற செங்கொடி என்றதும் அந்த மேடையிலேயே நிலைகுலைந்து ,மாநாடு நிறைவுற்ற அடுத்த வினாடி,ஒரு மாதத்திற்கு மேல் கழுத்து வலியோடு, அன்று கூட நரம்பியல் மருத்துவரை காண சென்று அவர் வர சற்று கால தாமதம் ஆனதால் உடனே மாநாட்டு திடல் வந்து , காலையிலிருந்து உணவு உட்கொள்ளாத நிலையில் காஞ்சி மருத்துவமனை நோக்கி மின்னலென விரைந்து சென்று தன்னை அன்பால் அணுகும் தங்கை இன்று அனலில் வெந்து அணையாவிளக்கானதை கண்டு கலங்கி நின்றார்.
அடுத்த நாள் காலையில் தொடர்பு கொண்ட தோழர் மகேஷ் எழுச்சித்தமிழர் மேண்மையாளர் அவர்களிடம், தங்கை செங்கொடியின் தகனம் குறித்து அவரின் வழிகாட்டுதலை வேண்டினார், தலைவர் விடுதலைச்செழியன்,பார்வேந்தன் ஆகியோரை அவருக்கு துணையாக இருக்க செய்து தானும் விரைவில் வந்துவிடுவதாக தெரிவித்தார்.அதன் பிறகு காலை மணியளவில் சட்டசபையினில் முதல்வர் அவர்கள் மூவரின் மரண தண்டனையில் தலையிடும் அதிகாரம் தனக்கு இல்லை என தெரிவித்த அதிர்சிகரமான செய்தி வந்தடைந்தது. இந்நிலையில் மருத்துவமனை நடைமுறைகள் முடிந்து தங்கை செங்கொடி தியாக உடல் ஒப்படைக்கப்பட்டது.மக்கள் மன்றம் காஞ்சிபுரதிலிருந்து சற்று தொலைவில்,சொந்த போக்குவரத்து உள்ளவர்கள் மட்டுமே எளிதில் சேரமுடியும் என்பதால், தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் வீரவணக்கம் செலுத்த வாய்பளிக்கும் வகையில் காஞ்சி நகரிலேயே தியாக உடல் பார்வைக்கு வைக்க முடிவு செய்யபட்டது.
அதற்கு தகுந்த பொது இடம் கிடைக்காத நிலையில்,பார்வேந்தன் அவர்கள் உணர்வின் அடிப்படையிலும் மக்கள் மன்றத்திற்கும் விடுதலைச்சிறுத்தைகளுக்கும் உள்ள உறவு நாடறிந்தது என்பதாலும் அவரது இல்லத்தில் ஒரு பகுதியினை பயன்படுத்த முன் வந்ததும் அதனை பார்வையிட்ட அனைவரும் அது மிகவும் தகுந்த இடம் என முடிவு செய்தனர்.அப்போது சிலர் வழக்கம் போல் தங்களது நற்பன்பினை வெளிக்காட்டும் வகையில் அந்த இடம் அரசியல் சார்புடைய தோற்றம் தரும் எனவே வேண்டாம் என்றனர், அதற்கும் பார்வேந்தன் அவர்கள் அந்த இடத்தையே மக்கள் மன்றத்திற்கு அளிக்கிறேன் என்றார் இருப்பினும் அந்த உணர்வாளர்கள் அதனை தவிர்க்க பலப்பல வழிமுறைகளை கையாண்டதை சகிக்கமுடியாமல்,தோழர் மகேஷ் அவர்கள் தங்கை செங்கொடியின் விருப்பம் மக்கள் மன்ற கம்யுனில் அடக்கம் செய்யப்படவேண்டும் என்பதுதான் எனவே அங்கு கொண்டு செல்லலாம் என சொன்னார். அதன்படி சுமார் ஐந்து மணி நேரம் ஊர்வலமாக மக்கள் மன்றம் கொண்டு வரப்பட்டது தங்கை செங்கொடியின் உடல்.
அப்போது அங்கு வந்து இருந்து தமிழ் தேசிய கள உணர்வாளர்கள் சிலர், செங்கொடி, கரும்புலி முத்துக்குமார் தியாகம் தமிழ் தேசிய விடுதலை களத்தில் ஒரு எழுச்சியினை உருவாக்கியது போல் எனது தியாகத்தை மூவரின் விடுதலைக்கு பயன்படுத்துங்கள் என கூறியுள்ளார் எனவே அவரின் உடலை சென்னை கொண்டு சென்று அங்கே உண்ணாவிரதம் இருக்கும் வழகறிஞ்சர்கள் பக்கத்தில் ஓரிடத்தில் வைக்கலாம் என்றார்கள். எனவே தலைவர் எழுச்சித்தமிழர் மேண்மையாளர் அவர்கள் மக்கள் மன்றத்திலேயே ஒரு ஆலோசனை கூட்டம் கூட்டினார்அதில் மக்கள் மன்ற மகேசு,ஜெஸ்சி,அய்யா.நல்லகண்ணு, அண்ணன்.கொளத்தூர் மணி,தோழர் மகேந்திரன், தோழர் பழனிசாமி, மல்லை.சத்யா,பாலவாக்கம் சோமு, மணியரசன், சுப.இளவரசன்,செய்தியாளர் டி.எஸ்.மணி, வழக்கறிஞர் பாவேந்தன்,தோழர் ரேவதி,இயக்குனர் ராம், இயக்குனர் கௌதமன், தோழர் மே 17 திருமுருகன்,மற்றும் விடுதலைச்சிறுத்தைகள் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய ஒரு சிலர் உணர்ச்சிவயப்பட்டு கண்டிப்பாக தியாக உடல் சென்னை கொண்டு செல்ல வேண்டும் என்றனர், மக்கள் மன்ற மகேசும்,ஜெஸ்சியும் அதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை ஆனால் தியாக உடல் மறுபடியும் மக்கள் மன்றத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றனர் இதில் உள்ள சிக்கலை எடுத்துரைத்தும், இறுதியாக அய்யா நல்லகண்ணு இங்கேயே அடக்கம் செய்து விடலாம் என்று சொன்னதை ஏற்க மறுத்துவிட்டனர்.
அந்த நிலையில் எழுச்சித்தமிழர் மேண்மையாளர் அவர்கள் விவரமாக அணைத்து சிக்கலையும் எடுத்துரைத்து அய்யா நல்லகண்ணு சொல்வது தான் சரி, சென்னை கொண்டு செல்வதால் அதில் ஒரு அடிப்படை இல்லை,அதுவும் இல்லாமல் அடுத்த நாள்(30.08.11) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது அரசுடன் மோதல் போக்கு என்பது போல தேவையற்ற சில நிலைகளையும் ஏற்படுத்தும் என்றார். வேண்டுமானால் ஒரு யுக்தியாக நாளை அதாவது அன்று செங்கொடியின் உறவினார்கள் வீரவணக்கம் செலுத்தட்டும், ஒரு வேளை அடுத்த நாள்(30.08.11) மூவர் மரண தண்டனை வழக்கில் ஏதாவது பாதகமான சூழல் ஏற்பட்டால் உடலை 31.08.11அன்று சென்னைக்கு முத்துகுமார் நினைவிடம் பக்கத்தில் அடக்கம் செய்ய கொண்டு சென்று ஒரு எழுச்சியினை உருவாக்கலாம், சாதகமான சூழல் ஏற்பட்டால் 31.08.11 அன்று நல்லடக்கம் அணைத்து கட்சியினர்,தமிழ் உணர்வாளர்கள், அணைத்து தரப்பு மக்களின் வீரவணக்கத்தோடு நல அடக்கம் செய்யலாம் என்றார்.ஒருவேளை சென்னையில் அடக்கம் செய்ய வேண்டி இருந்தால் அதற்கு தலைவர் எழுச்சித்தமிழர் மேண்மையாளர் மீது நம்பிக்கை கொண்டு சம்மதிப்பதாக மக்கள் மன்ற மகேசும்,ஜெஸ்சியும் சொன்னார்கள்.
ஆக இப்படிதான் கரும்புலி செங்கொடியின் தியாகம் அர்த்தமுள்ளதாகவும், அவரின் நோக்கம் நிறைவேறும் வகையிலும் எழுச்சித்தமிழர் மேண்மையாளர் அவர்களின் சீரான வழிகாட்டுதல்படி 31.08.2011 அன்று அனைவரும் வீரவணக்கம் செலுத்த நல்லடக்கம் செய்யப்பட்டது.
தலைவர் எழுச்சித்தமிழர் மேண்மையாளர் கட்டளையின்படி, மூன்று நாட்களும் அங்கேயே தங்கி விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகள் சிறப்பாக செயலற்றியதையும்,நிகழ்ச்சிக்கான அணைத்து ஏற்பாடுகளையும் செய்ததையும் மக்கள் மன்றத்தினரும், அணைத்து தரப்பினரும் நன்றியுடன் நினைவுகூறத்தக்க செயல் இது என தெரிவித்து சென்றனர்